ரூ.27 லட்சம் சம்பளத்தில் வேலையா.? டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

 
எஸ்.பி.ஐ.வங்கி

எஸ்.பி.ஐ.வங்கியில் ஆண்டுக்கு 27 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  எஸ்.பி.ஐ வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

எஸ்.பி.ஐ

MMGS-II பணி வகைகளுக்கு ரூ.48,170 -69,810 வரை அடிப்படை சம்பளம் வழங்கப்படும். Contractual பணியாளர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Software Engineering/ Electronics & Communications Engineering ஆகிய பாடங்களில் BE/ BTech தேர்ச்சி அல்லது Computer Science/ Information Technology/ Electronic & Communications Engineering பாடங்களில் MCA/ MTech/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மேலும் பணிக்கேற்ற அனுபவம் தேவை என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 எஸ்.பி.ஐ

MMGS-II பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். Contractual பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இப்பணிகளுக்கு https://bank.sbi/ என்ற இணையத்தளத்தில் அல்லது https://ibpsonline.ibps.in/ என்ற இணையத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றும் https://ibpsonline.ibps.in/sbisconov22/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2023 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web