உள்ளாட்சித் துறை அமைச்சரின் சொந்த ஊரில் தொழிலபதிபர் கொலை! கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்?!

-மகரன்
 
தொழில்போட்டி

தமிழகம் கொலைக் களமாக மாறி வருகிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு தினமும் ஏதோவொரு மாவட்டத்திலாவது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை என வன்முறை செயல்கள் அரங்கேறி வருகிறது. பட்டப்பகலில், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் வலம் வருகின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் சொந்த ஊரிலேசொ யே தொழிலதிபர் ஒருவரை மர்ம கும்பல் கொலைச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், காலையில், அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த போது கொல்லப்பட்டது போலவே காலை, நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த மாதவன் என்பவர் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி மாவட்டம் ,லால்குடி அருகே மாந்தரை கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற 45 வயது இளைஞரை, அதே பகுதியில் உள்ள கைலாஷ் நகர் பகுதியில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் 45 வயதான மாதவன். இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 1/2  சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில்  விசாரணை செய்து வருவதாகவும்  கூறப்படுகிறது.

மாதவன்

இந்நிலையில் இன்று அதிகாலை நடை பயிற்சி சென்ற மாதவனை அடையாளம் தெரியாத மர்ம  நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை குறித்து  லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் லீலி கொலை நடந்த இடத்திலிருந்து திருச்சி லால்குடி மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது. பின்னர் தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இரத்தம் வன்முறை க்ரைம் வெட்டு படுகொலை

குற்றவாளிகளை பிடித்த பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியும் என போலீசார் கூறினார். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடத்தி வரும் மாதவனை முன் விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகமடைகின்றனர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நாளுக்கு ஒரு கொலையாவது நடந்து விடுகிறது. தற்பொழுது நடந்த கொலை உள்ளாட்சித்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளரும் கே.என். நேருவின் சொந்த ஊர்  என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web