ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!! கடும் பீதியில் பொதுமக்கள்!!

 
சிறுத்தை

சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு கிராமத்தில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். மேலும் பாதுகாப்பு காரணத்திற்காக நாய்களையும் வளர்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தை வேட்டையாடுவது வாடிக்கையாகியானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

 

பொதுமக்களே உஷார்! சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்!

இந்நிலையில் சிவக்குமாரின் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் நாயை தேடி வந்தார். அப்போது காணாமல் போன நாயின் பாதி உடல் அப்பகுதியில் உள்ள ஒரு புங்கமரத்தின் மேல் கிளையில் ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சிவக்குமார் பவானிசங்கர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிவக்குமார் வளர்த்து வந்த நாயை வேட்டையாடியதுடன் உடலை தூக்கிச் சென்று மரத்தின் மீது வைத்து பாதி உடலை தின்றுவிட்டு மீதி உடலை அங்கேயே விட்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

vana

இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் வசித்து வரும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பலரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும் என்று அஞ்சுகின்றனர். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தின் அருகே வனத்துறையினர் கூண்டு வைத்து ஒரு சிறுத்தையை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web