3-ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம்!! பெருமையாக உணர்ந்த முதல்வர்!!

 
மாணவி ஆராதனா

அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம் கேட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆராதனா என்ற சிறுமி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார்.  இந்த மாணவி தான் படிக்கும் அரசு பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஸ்டாலின்

இந்த நிலையில் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ஆராதனா எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினார். மேலும் 3 ஆம் வகுக்கு சிறுமி கூடுதல் வகுப்பறை கேட்டு தனக்கு கடிதம் எழுதியது   பெருமையாக உள்ளதாக முதல்வர் கூறினார். அந்த மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர் ரூ.35 லட்சம் செலவில் கட்டடம் கட்டித்தரப்படும் என்று விழா மேடையிலேயே உறுதியளித்தார். இதற்கு மாணவி ஆராதனா மற்றும் மாணவியின் தந்தை தங்கராஜ் நன்றி தெரிவித்து கொண்டனர்.

மாணவி ஆராதனா

இதனைத்தொடர்ந்து, மாணவி ஆராதனாவை பள்ளிக்கு தேடி சென்று கிராம மக்கள் பாராட்டினர். மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். முதலமைச்சர் அறிவிப்பால் வினைதீர்த்த நாடார்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுமியின் இந்த செயல் மற்ற மாணவிகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது,

From around the web