தேசிய கட்சியா? சாதிய கட்சியா? பாஜவை நோக்கி திசைத் திரும்பும் தமிழக சாதி கட்சிகள்!

 
அண்ணாமலை

யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் மெல்ல பாஜக வளர்கிறது. அந்த நிஜத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். திமுக பதவியேற்று இன்னும் இரு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், திமுகவின் ஆட்சி மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சென்னையில் திரும்புகிற இடங்களில் எல்லாம் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் விளம்பர பலகைகள், மருமகன் சபரீசனின் வளர்ச்சி, பொறுப்பான அமைச்சர் மக்கள் மத்தியில் திடீரென ஆவேசமாகி ‘மசு..ரு’ என கத்துவது, அரசு பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்களை, ஓசி டிக்கெட் என சொன்னது, தமிழக இந்து கோவில்களில் அத்துமீறும் அறநிலையத்துறை, லோக்கல் வட்ட செயலாளர் முதல் கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர் வரையில் ஆவேசமாக அப்படி தான் செய்வோம்... 10 வருஷம் சும்மா இருந்தீங்க இல்ல என வார்த்தைகளை பொதுமக்களிடையே உதிர்த்திருப்பது என அதிருப்தி அதிகரித்துள்ளது. பட்டப்பகலில் கத்தியை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு பாய்கிறார் திமுக கவுன்சிலரின் கணவர்.. ஆனால், கட்சியிலிருந்து நோ ரியாக்‌ஷன்.

இத்தனைக்கும் எப்போதும் மழைக்காலங்களில் மிதக்கும் சென்னையின் சாலைகளில் இம்முறை மழை நீர் தேங்கவில்லை. இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாக முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறார். மக்கள் நலனுக்காக திட்டங்களைத் தீட்டுகிறார். ஆனால், ஒருவர் மட்டுமே இழுப்பது தேர் கிடையாது. ஊர் கூடி தேர் இழுத்தால் தானே? அவருடன் கைக்கோர்க்க யாருமில்லாத நிலையைத் தான் திமுக கூட்டத்திலும் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

திமுக கவுன்சிலரின் கணவர்

இந்நிலையில், திமுக, அதிமுக என மாறி மாறி சவாரி செய்யும் சாதிய கட்சிகள் இப்போது மெல்ல தங்களது பார்வையை பாஜக பக்கம் திருப்பியிருப்பதாக தெரிய வருகிறது. மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காத அதிமுக, எதிர்கட்சியாக, தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே செயல்படவில்லை. ஓபிஎஸ்ஸூம், பன்னீரும் அவர்களுக்குள் அடித்துக் கொள்வதிலேயே நேரமில்லாமல் தவிக்கிறார்கள். 

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு, முத்தரையர் சமூகத்தில் இருந்தும், வெள்ளாளர் சமூகத்திலிருந்தும் எழுதப்பட்டதாக கடிதம் ஒன்று பிட் நோட்டீஸ் வடிவில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

திரு. அண்ணாமலை அவர்களுக்கு தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 2 கோடி பூர்வீக குடிமக்களான  முத்தரையர் சமூகம் சார்பில் ஒரு வேண்டுகோள் என துவங்குகிறது அந்த கடிதம். அதன் சாரம்சம் இது தான்..

நாடு சுதந்திரம் அடைந்து இந்த 75 ஆண்டுகளில் முத்தரையர் சமூகம் சார்பாக ஒருவருக்கு கூட மாநிலங்களவை உறுப்பினராக எந்த கட்சியும் இதுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய 15% முத்தரையர் சமூகம்  இருக்கும் நிலையில் கடந்த 75 ஆண்டுகளில் மூன்று நபர்கள் மட்டுமே முத்தரையர் சமூகம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 

பொன்முடி

திருச்சி N செல்வராஜ் (திமுக) புதுக்கோட்டை இராஜா பரமசிவன்  (அதிமுக),பெரம்பலூர் மருதை ராஜ்  (அதிமுக). முத்தரையர் சமூக மக்களை பொறுத்தவரை அஇஅதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அதிக அளவில் எந்த பிரதிபலனும் இல்லாமல் வாக்களிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய சமூகமான முத்தரையர் சமூகம் வாக்களிக்காமல் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

முத்தரையர் சமூகத்தை பொறுத்தவரை இந்து மதத்தையும் இந்து கலாச்சாரத்தையும் தீவிரமாக பின்பற்ற கூடியவர்கள். மதம் மாறாத சமுதாயம் முத்தரையர் சமூகம். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டுருக்கும் தாங்கள் தமிழகத்தின் பெரும்பான்மையான முத்தரையர் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, முத்தரையர் சமூக சார்ந்த ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும். மேலும் 2024 ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முத்தரையர் சமூக மக்கள் அதிகமாக வாழும் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், பழனி, மதுரை போன்ற தொகுதிகளில் முத்தரையர் சமூகம் சார்ந்த நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மேலும் கட்சி பொறுப்புகளில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளை நியமனம் செய்து முத்தரையர் சமூக மக்கள் மனதில் இடம் பிடித்தால்  உங்கள் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி விரைவில் நடைபெறும். தொடர்ந்து முத்தரையர் சமூக மக்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பிறகு முத்தரையர் சமூக மக்களுக்கு ஏதும் செய்யாமல் முத்தரையர் சமூக மக்களை புறக்கணிப்பதால் அந்த கட்சிகளை முத்தரையர் சமூக மக்கள்(இளைஞர்கள்) புறக்கணிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படி MR சுப்பிரமணியன். தலைவர் காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கம். வேதாரண்யம். என ஒரு பிட் நோட்டீஸ் சுற்றி வருகிறது, அதே.போல வெள்ளாளர் சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ தமிழகத்தில் பாஜகவையும் தேடி சாதிக் கட்சிகள் சாய ஆரம்பித்து இருக்கிறது. என்ன நடக்கிறது என பார்ப்போம் !

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web