சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இன்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்…

 
சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதனையொட்டி சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். இதனால்  தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அரசுப் பேருந்து

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல இன்று முதல் வரும் ஜனவரி 20ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து இந்தாண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை

அதனை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்யும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மற்றும் TNSTC Official app. ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்யலாம். மேலும், தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web