நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டர்! அதிர்ஷ்டவசமாக தப்பித்த இளம்பெண்!
இளம்பெண் ஒருவர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது நடுரோட்டில் திடீரென அவர் ஓட்டி சென்ற மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த சம்பவம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிவதை அதிர்ச்சியுடன் பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு, அந்த இளம்பெண்ணைக் காப்பாறினார்கள். அதிர்ஷ்டவசமாக இளம் பெண் உயிர் தப்பினார்.
இந்தியாவில் பல இடங்களில் இப்படி மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிவதும், அதன் பேட்டரிகள் வெடித்து சிதறுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்படி மின்சார பைக் எரிந்த சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு பெருமளவில் ஊக்குவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும், புதிய ரகங்களில் மின்சார பைக்குகளை உருவாக்கி வருகிறது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த வகை மின்சார பைக்குகள், கடந்த சில காலமாகவே திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசமாவதை மக்களிடையே பெரும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் அருள்ஜோதி. இவருக்கு வயது 33. தனியார் நிதி நிறுவனத்தில் அருள்ஜோதி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் அருள்ஜோதி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பேட்டரி பகுதியில் இருந்து புகையுடன் நெருப்பு கிளம்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்ஜோதி அதிர்ச்சியடைந்தார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அருள் ஜோதியிடம் இது பற்றி கூறி எச்சரிக்கை செய்ததும், ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரை அப்படியே போட்டு விட்டு இறங்கி ஓடினார்.

சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனது. சிறிதளவு நெருப்பை பார்த்த உடனேயே சமயோஜிதமாக செயல்பட்டு அருள்ஜோதி இறங்கி ஓடவில்லை என்றால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கு முன்னர் இதே போன்றதொரு சம்பவம் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் நடைபெற்றது. சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென்று வெடித்த விபத்தில், தந்தையும், 13 வயது சிறுமியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர், திருவள்ளூர், திருச்சி, சென்னை பல்வேறு மாவட்டங்களில் மின்சார பைக்குகள் தீவிபத்து என தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
