நடு காட்டில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் வினோத திருவிழா!!

 
வினோத திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்   பருவமழை பெய்து போய் உள்ளது. இதனால்  விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்காததால் விவசாயிகள்  வேதனையடைந்தனர். இந்நிலையில் மழை வேண்டி  கிராமத்தின் கண்ணுக்கு தென்படாத  அடர்ந்த வனப் பகுதியில் உள்ள எல்லைப் பிடாரி அம்மறுக்கு நள்ளிரவில் பூஜைகளை செய்தனர். அப்போது  101 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.  

அப்போது இந்த நள்ளிரவு பூஜையில் பங்கேற்ற  ஆண்களுக்கு கடந்த ஆண்டு தாங்களது வயலில் விளைந்த கைகுத்தல் பச்சரிசி  சாதம் சமைத்து அம்மனுக்கு படையலிட்டு பிரசாதமாக அசைவ உணவு காலையில் பரிமாறபட்டது. நடு காட்டில் ஆண்கள் மட்டும் இருந்து ஆடுகளை பலி கொடுத்து அதனை எடுத்து வந்து சமைத்தனர். பின்னர் கை குத்தல் அரிசியால் சோரு செய்து அதனை உருண்டை  உருண்டையாக செய்து  பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து மற்றவர்களுக்கு அளித்தனர்.  

இதில் ராமநாதபுரம், விருதுநகர் ,தூத்துக்குடி, சிவகங்கை ,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்வமுடன்  சிறுவர், இளைஞர், முதியோர் என   ஆண்கள் மட்டுமே   பங்கேற்று எல்லை பிடாரி  அம்மனை வழிபட்டு அசைவ உணவில் பங்கேற்று சென்றனர். இதனால் மழை பொருந்து விவசாயன் செழிக்கும் என நம்பும் இம்மக்களின் வழிபாடு முறையும் மக்களை வியக்கவைத்துள்ளது.

From around the web