விடுதியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய மாணவி கைது!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக். மருத்துவரான இவர் கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். ஆசிக்கிற்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இவருக்கு அவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் தங்கியுள்ள பெண்கள் விடுதியில் தன்னுடன் உள்ள மற்ற பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் அவர்கள் உடை மாற்றும் புகைப்படங்கள் அவர்கள் தூங்கும் அரை நிர்வாண புகைப்படங்கள் ஆகியவற்றை தனது செல்போனில் எடுத்து அதை எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பி வந்துள்ளார். இதனை அவர் நாள்தோறும் செய்வதை கவணித்த அங்குள்ள பெண் ஒருவர், இது குறித்து விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காளீஸ்வரியின் செல்போனை பிடிங்கி பார்த்தபோது அதி ஏராளமான பெண்களின் போட்டோக்கள், வீடியோக்கள் இருந்துள்ளது. இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கை விசாரித்து வந்தார். போலீஸாரின் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, டாக்டர் ஆசிக், மாணவி காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.