பிரபல நடிகர் வீட்டில் திடீர் ரெய்டு!! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!!

 
நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் மலையாளம் மட்டும் இன்றி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர்  தமிழில் சத்தம் போடாதே, மொழி, போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ்  நடித்த கோல்ட் என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார்.

வருமான வரித்துறை சோதனை

இந்நிலையில்  நடிகர் பிருத்விராஜின் வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினர்.

பிருத்விராஜ்

இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்ட நிலையில், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 

From around the web