உடல் உறுப்புக்கள் தானத்தால் இறந்தும் பல பேரிடம் உயிர் வாழும் பெண்!!!

விபத்தில்  மூளைச்சாவு  அடைந்த  பெண்ணின்  இதயம்,  சிறுநீரகம்  தானம்  செய்யப்பட்டது. 

 
உறுப்பு தானம்

தானத்தில் சிறந்த ஒன்றாக உடல் உறுப்பு தானம் உள்ளது.  தான் பெற்றதை, அனுபவித்ததை  தனக்கு பிறகு தனது உடல் உறுப்புகளால் மற்றவர்கள் அனுபவிக்க  வழங்கப்படும் உந்த உறுப்புக்கள் பலரது வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்திறது. பலருக்கு  அது வாழ்க்கையை தருகிறது. இதனால் தான் செய்தவர் பலர் வடிலில் இங்கு வாழதுகொண்டிருக்கின்றார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சோந்தவர்கள்  முருகன்- கலைச்செல்வி தம்பதி. முருகன் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், 2 பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி  கூலி வேலை செய்து 2 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்ற போது பின்பக்கம வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கலைச்செல்வியின் இதயம், சிறுநீரம் உள்பட உடல் உறுப்புகளை தானமாக செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனா். இதனையடுத்து  அதே மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து அப்பெண்ணின்  இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

முதற் கட்டமாக இதயம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த இதயம் ஆம்புலென்ஸ் மூலமாக காவேரி மருத்துவமனைக்கு அனுப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும் உறுப்புக்களை தானம் வழங்கி பலரது வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்த கலைச்செல்வி குடும்பத்தாறுக்கு  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.

From around the web