இளம் கபடி வீரர் கரணம் அடித்த போது மரணம்! கோவில் திருவிழாவில் சோகம்!

 
வினோத் குமார்

இளம் கபடி வீரர், கோவில் திருவிழாவில் நடைப்பெற்ற கபடி போட்டியின் போது கரணம் அடித்த போது, எதிர்பாராத வகையில் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும், கபடி போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கபடி விளையாட்டில் கே.எம்.எஸ். கபடிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டி விளையாடினர். இந்த போட்டியில் களத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 34 வயதான கபடி வீரர் வினோத்குமாரும் கலந்து கொண்டார்.

வினோத் குமார்

விளையாட்டின் போது வினோத்குமார் கரணம் அடித்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்சியடைந்த சக வீரர்கள் மற்றும் விழா குழுவினர் வினோத்குமாரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வினோத்குமார் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அங்கும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையில் வினோத்குமார் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கபடி வீரர் வினோத்குமார் மரணமடைந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்தோஷ், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். வினோத்குமார் கபடி பயிற்சியின் போது கரணம் அடித்து மயங்கி விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கபடி

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த இளம் வீரர் விமல்ராஜ் (21) பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டார். 


அப்போது போட்டியில் ரைடு சென்று திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். பின்னர் எழுந்த நின்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மைதானத்திலேயே அனைவர் முன்னிலையிலும் விமல்ராஜின் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web