ஓடும் டிரக்கின் மேல் நடனமாடிய இளைஞர்… பாலத்தில் மோதி உயிரிழந்த சோகம்…

 
பலி

டெக்சாஸில் ஓடும் லாரியின் மேல் நடனமாடிய 25 வயது இளைஞர் பாலத்தில் மோதி உயிரிழந்தார். அமெரிக்காவில் டெக்சாஸின் ஹூஸ்டனில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த டிரக்கின் மேல் இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார்.

ட்ரக்

அப்போது  ஈஸ்டெக்ஸ் ஃப்ரீவேயில்   பாலத்தின் அருகே சென்றுக்கொண்டிருந்த போது   அந்த இளைஞர் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

பாலம்

ஈஸ்டெக்ஸ் ஃப்ரீவேயில், அடையாளம் தெரியாத நபர் டிரக்கில் இருந்து கீழே விழுந்ததை கண்ட மக்கள் பதற்றம் அடைந்தனர். நெடுஞ்சாலையில் அருகில் இருந்த ஓட்டுநரால் பதிவுசெய்யப்பட்ட இந்த காட்சிகளில், அந்த நபர் ஒரு வெள்ளை ரேபிட் 18 சக்கர டிரக்கின் மேல் ஏறி, நகரும் வாகனத்தின் மீது நடனமாடுவதைக் காட்டுகிறது. உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து   போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web