காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்.. ஆனால் வேறு ஆணுடன் ஓடிய தோழி !

 
சோனால்

காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். இவர் அங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு சனா என்பவர் வாடகைக்கு வந்தார். அவர் அதே வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தார்.சோனலும், சனாவுக்கும் நட்பு ஏற்பட்டு நல்ல தோழிகளாக மாறினர். பின்னர் நெருக்கமாக பழகுவதை அறிந்த சோனாலின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் விரும்புவதை ஏற்காததால், சனாவை வெளியே செல்லுமாறு கூறினர்.

சோனால்

இதனால் சனா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சனாவுடன் தான் வாழ்வேன் என்று கூறிவிட்டு சோனாலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் இருவரும் காலம் முழுவதும்  கணவன், மனைவிபோல் வாழ்வது என முடிவு செய்தனர். 

இதன்காரணமாக, சனா பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜூன் 22, 2020 அன்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆணாக மாறிய அவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஹோகைல் கான் என மாற்றிக் கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, சோஹைல் கானின் மனைவியாக அனைத்து மருத்துவ ஆவணங்களிலும் சோனால் கையெழுத்திட்டார்.

சோனால்

சனா ஏற்கனவே ஒரு அரசாங்க வேலையில் இருந்ததால் சோனலும் ஒரு அரசு வேலையை விரும்பினார். 2022 இல், சோனல் யதர்த் மருத்துவமனையில் வேலை பெற்றார். இருப்பினும், சோனாலின் நடத்தையில் சனா ஒரு மாற்றத்தை கண்டார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்த கியான் என்பவருடன் சோனாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், சோனால், சனா இடையே ஒரு நாள் சண்டை ஏற்பட்டது. இதனால் சோனால், தனக்காக ஆணாக மாறிய சனாவை விட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் கியானுடன் வாழ விரும்புவதாக சனாவிடம் சோனால் கூறியுள்ளார். 

சோனால்

மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் அளித்த புகாரில், சனா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டில் போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம் சனா தனக்கு நடந்த கொடுமைகளை போலீசாரிடம் விவரித்தார். இந்த நிலையில், சோனாலை கடந்த ஜனவரி 18ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். எனினும் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 


 

From around the web