தமிழகம் முழுவதும் அதிமுகவினர் திடீர் சாலை மறியல்! பொதுமக்கள் அவதி!

 
எடப்பாடி மறியல்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அண்ணா திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும், எடப்பாடி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் குவிந்ததால், போலீசார் கைது செய்துள்ள நிலையில், எடப்பாடி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல பகுதிகளிலும் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர். 

எடப்பாடி

அதிமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கடந்த 17ம் தேதி சட்டசபை கூடியது. அப்போது சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து சபாநாயகர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

இபிஎஸ்
அதையும் மீறி இன்று காலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரண்டனர். அப்போது போலீசார், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்து வள்ளுவர்கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அப்பகுதியில் திரண்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web