குழப்பதில் அதிமுக தொண்டர்கள்.. பெரும் குழப்பத்தில் ஜி.கே.வாசன்.. இது ஓபிஎஸ் ஆட்டம் !!

 
பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிருகிறது. இதேபோன்று இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரவுள்ளது. இதில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், தங்கள் பலத்தை நிரூபிக்கவும் இரு தரப்பினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது இடைத் தேர்தல் வருவதால் மீண்டும் அந்த கட்சிக்கே ஒதுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது.

ops

இதனால் தேர்தலில் போட்டியிட பழனிசாமி தரப்பினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர். எனினும் இடைத்தேர்தல் தொடர்பாக என்ன பேசிக்கொண்டனர், ஜி.கே.வாசன் என்ன பதில் அளித்தார் என்பது போன்ற தகவல்கள் வெளிவரவில்லை. 

ops

இதனிடையே, இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளன. அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வமும் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். 

From around the web