சாய்னா நோவால் அசத்தல்!! உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 3 வது சுற்றுக்கு முன்னேறினார்!!

 
சாய்னா நோவால்

 

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3வது சுற்றில் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 22ம் தேதி தொடங்கி 28ம் தேதி வடை நடைபெறுகிறது. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 352 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 

சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க்கும் வாய்ப்பு இல்லை

இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் செயுங்கன்யி என்ற ஹாங்காங் வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் 38 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21&29 என்ற நேர் செட்கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வெற்றி பெற்றார். இவர் தனது 2வது சுற்றில் ஜப்பான் நாட்டு வீராங்கனை நோசோமி ஒகுஹாராவுடன் மோதுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியில் இருந்து திடீரென்று விலகினார். இதைத்தொடர்ந்து சாய்னா நேவால் நேரடியாக 3வது சுற்றில் களம்கண்டு வெற்றியை பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து சாய்னா நேவாலின் ரசிகர்கள் உற்சாகம்m அடைந்துள்ளனர்.

சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க்கும் வாய்ப்பு இல்லை
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லோ யீன் யுவான், வலேரி சியோவ் ஜோடியை எதிர்த்து இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் புல்லேலா காயத்ரி ஜோடி அபாரமாக விளையாடியது. ஆட்ட நேர இறுதியில் 21&11, 21&13 என்ற நேர் செட்கணக்கில் மலேசியா ஜோடியை, இந்திய ஜோடி வெற்றி பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றியை குவித்து வருவது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web