அசத்தல்!! காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகளை காப்பாற்றிய இளைஞர்கள்!!

 
வெள்ளம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக விளங்கும் மலட்டாறில் அதிகளவு நீர் வரத்து இருந்து வருகிறது. 

வெள்ளம்
இந்நிலையில் விபரீதம் தெரியாமல் மலட்டாற்றில் நேற்று 2 சிறுமிகள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் அதிகளவிலான நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 2 சிறுமிகளும் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிர் பயத்தில் கூச்சலிட்டனர். இதை அங்கிருந்து உள்ளூர் இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வெள்ளம்
உடனடியாக நீரில் குதித்த இளைஞர்கள், 2 சிறுமிகளை தங்கள் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.தங்கள் உயிரை பணயம் இளைஞர்கள் சிலர் 2 சிறுமிகளை காப்பாற்றிய துணிச்சல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web