சாதனை!! ஒரு கோடி மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக தேசியகீதம்!!

 
மாணவர்கள்


நாளை மறுநாள் (15ம் தேதி) இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுதந்திரதின கொண்டாட்டங்கள் களை இழந்து போனது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வெகு ஜோராக தயாராகி வருகின்றன. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

தேசிய கீதம்

இந்நிலையில் ராஜஸ்தானில் 1 கோடி பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து ஒன்றாக 25 நிமிடங்கள் பாடல்களை பாடி அசத்தி உள்ளனர். தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் வந்தே மாதரம், சாரே ஜஹான் சே அச்சா மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட பாடல்களை மாணவர்கள் ஒன்றாக பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

தேசிய கோடி

இந்த சாதனை லண்டனின் புகழ்பெற்ற வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சாதனை புரிந்த 1 கோடி பள்ளி மாணவர்களுக்கும், அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்திற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web