அதிரடி!! செப்டம்பர் 4ம் தேதி நீட் தேர்வுக்கான மறுதேர்வு!!

 
நீட்

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அந்த வகையில் நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடத்தப்பட்டது.  இந்த தேர்வு நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெற்றது. அந்த வகையில்  கேரளாவில்  கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை 'மெட்டல் டிடெக்டர்' கொண்டு சோதனை நடத்தினர். அப்போது அவரது உள்ளாடையில் இருந்த கொக்கியை 'மெட்டல் டிடெக்டர்', 'பீப் 'ஒலி எழுப்பியது.

நீட் தேர்வு ரத்து: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை! – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இதனால்  குறிப்பிட்ட  மாணவியை உள்ளாடையை அகற்றினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர். வேறு வழியில்லாமல்  அந்த மாணவி உள்ளாடையை அகற்றிவிட்டு மன உளைச்சலுடன்  3 மணி நேரமும் 'நீட்' தேர்வை எழுதினார். இது குறித்த தகவல்களை அந்த மாணவியின் தந்தை வெளியிட்டார்.
தன் மகளுடன் தேர்வு எழுத வந்த பல  மாணவிகளுக்கு இது போன்று நடந்துள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு விரிவாக கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர்  டாக்டர் ஆர்.பிந்து கடிதம் எழுதினார்.

நீட் தேர்வு
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் செய்ததில் கொட்டாரக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து 'நீட்' தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை  தனிக்குழு  அமைத்து விரிவான விசாரணை நடத்தியது.இது குறித்து பரிசீலிக்கப்பட்டு தற்போது பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வு செப்டம்பர்  4ம் தேதி நடக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web