அதிரடி தீர்ப்பு!! சாலை விபத்தில் போதையில் உடன் பயணிப்பவர்களும் குற்றவாளிகளே!!

 
உயர்நீதிமன்றம்

வாகன ஓட்டிகள் குடிபோதையில் ஏற்படுத்தும் விபத்துகளில் தண்டனையில் உடன் பயணிப்பவருக்கும் சம பங்கு உள்ளதாக ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களாலேயே நிகழ்கிறது. அப்போது அவர்களுடன் உடன் பயணிப்பவர்கள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் வழக்குகளில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பித்துவிடுகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பயங்கர விபத்தில் 2 மீனவர்கள், ஒரு போலீஸ்காரர் பலியான சம்பவத்தில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

court order

சென்னையைச் சேர்ந்த சூர்யா, அவரது நண்பர் செபாஸ்டியன் ஆகியோர் கல்லூரி மாணவர்கள். மேலும் செபாஸ்டியனின் சகோதரி டாக்டர் லட்சுமி ஆகியோர் காரில் பயணித்துள்ளனர்.  அதிவேகமாக காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சூர்யா, மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலைக்குள் சென்றது. அப்போது அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த, 2 மீனவர்கள், ஒரு போலீஸ்காரர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த கொடூர விபத்தால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில்,  காரை ஓட்டிய சூர்யா குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிய சூர்யா உள்ளிட்ட 3 பேர் மீதும் குற்றம் சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். 

இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டாக்டர் லட்சுமி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காரில் பயணம் செய்தேனே தவிர மது குடிக்கவில்லை என்று கோரி இருந்தார்.


அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘‘தனது சகோதரர் குடிபோதையில் காரை ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்துக்கு மனுதாரர் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார். அதனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது’’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

Chennai High Court

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில், ‘‘குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளில், குடிபோதையில் இருக்கும் டிரைவர் மட்டுமல்ல, அந்த வாகனத்தில் உடன் பயணிப்பவர்களுக்கும் குற்றத்துக்கு சமமான பங்கு மற்றும் பொறுப்பு உள்ளது. எனவே குற்றவாளிகளில் ஒருவரான லட்சுமியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது’’ என்று கூறினார். மேலும் லட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இனி மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்களை கண்காணிக்கும் மற்றும் தடுக்கும் பொறுப்பு உடன் பயணிப்பவர்களுக்குள் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். இதன் மூலமாக விபத்துகள் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web