பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் அதிரடி! 15 டிசைன்களில் இலவச சேலை, வேஷ்டி! தமிழக அரசு அதிரடி!!

 
இலவச வேஷ்டி சேலை

10 வருடங்கள் கழித்து ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு வழங்கப்படும் சேலைகளின் டிசைன் மாறியிருக்கிறது. இந்த டிசைன்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விவசாய பெருமக்களால் வெகு விமரிசையாக ஒவ்வொரு வருடமும் தை முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலை 1983 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை விநியோகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தலைமைச் செயலகம் தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, காந்தி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரேஷன் கடைகளில்  புதிய டிசைனில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி  15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலைகளும் 5 டிசைன்களில் வேட்டிகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2014 ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது சேலைகளின் டிசைன்கள் மாற்றப்பட்டு பருத்தி சாயமிட்ட நூலினால் ஆன சேலைகள் வழங்கப்பட்டன.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

அதன் பிறகு தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இலவச வேட்டி சேலைகளின் டிசைன் மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.  இந்த இலவச வேட்டி சேலைகளை அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு குறித்தும் முதல்வர் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 14 மளிகை பொருட்கள் பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டன. இதில் பல குளறுபடிகள் நடந்ததாகவும், பொருட்கள் தரமற்று இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதனால் நடப்பாண்டில் பணமாக கொடுக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web