மீண்டும் அரசியலுக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த்??

 
 நடிகர்   ரஜினிகாந்த்

தமிழகத்தில் தொடர்சியாக திரைவுலகத்தினர்  கட்சி தொடங்குவது ஆட்சி அமைப்பது தொடர்கதையாகியுள்ளது.  அந்தவகையில் தமிழகத்தின்  மிக பெரிய அரசியல் ஆளுமையாக இருந்த  மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா,  கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் திரைதுறையினர் அரசியலில் அடி எடுத்து வைத்தனர். அதில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந், நடிகர் விஜய் ஆகியோர் அடங்குவர். இந்நிலையில் நடிகர் விஜய் தான் அரசியலில் இரங்கபோவதில்லை என தெரிவித்து பின்வாங்கினார். ஆனால் அவரது ரசிகர்கள் அதனை தற்போது செயல்படுத்தி வருகின்றனர். கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் கூட பல இடங்களில் விஜய் மக்கள் மன்றத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல் முழுமையாக தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி  தொடங்கபோவதாக அறிவித்து அதற்காக பல கட்டங்களாக  தொண்டர்களை சந்தித்தார். பின்னர் திடீரென தான் அரசியலில் இரங்கபோவதில்லை என தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளகினர். இந்நிலையில்  தற்போது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட ப்ப்வதாகவும் அதிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட போவதாகவும் சில செய்திகள் பரவி வருகின்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், "இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார்.நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார். விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார்" என்று கூறினார்.

From around the web