அதிதி ராவுடன் காதலை உறுதி செய்த நடிகர் சித்தார்த்!!

 
சித்தார்த் அதிதி ராவ்

தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் நடிகர் சித்தார்த்.அந்த வகையில் தற்போது அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பரவி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இவர் நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

சித்தார்த் அதிதி ராவ்

பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றித்திரியும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலருக்கு கூட  இருவரும் ஜோடியாக வந்தனர்.  இது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது பிறந்தநாளில் அதிதி ராவ் மீதான காதலை வெளிப்படையாக உறுதி செய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், என் இதயம் கனிந்த ராஜகுமாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு அத்துடன் அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சித்தார்த் அதிதி ராவ்

இதன் மூலம் இவர்களின் காதல் தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், விரைவில் திருமண தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.தற்போது சித்தார்த் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சமந்தாவுடன் திருமணம், விவாகரத்து, காதல் என  சர்ச்சைகளின் நாயகனாக இருக்கும் நடிகர் சித்தார்த்  இந்த காதலைகல்யாணம் வரை கொண்டு செல்ல வேண்டும் எனவும்  ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web