நடிகர் விஜய் ஆண்டனிக்கு 2 ஆவதாக அறுவை சிகிச்சை !

 
ப

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் விஜய் ஆண்டனி. பட தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், என பன்முக திறமையோடு விளங்கும் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது படத்தை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் இவர் தேர்வுசெய்யும் கதையும் அப்படிதான் இருக்கும். அந்த வகையில் கொலைகாரன், 'பிச்சைக்காரன் போன்ற படங்கள் சூப்பர்ஹிட் அடித்தது.இதைத்தொடர்ந்து தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2', கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் போன்ற அடுத்தடுத்த படங்களில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பிச்சைக்காரன், படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

னளக

இந்த விபத்தின் போது, எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார். இதில் விஜய் ஆண்டனி மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

தற்போது விஜய் ஆண்டனி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுயநினைவை இழந்த நிலையில் உள்ள அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பற்களும் உடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அவருக்கு இரண்டாவதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஆண்டனி கடலில் வாட்டர் பைக்கில் அதிவேகமாக சென்ற போது பலத்த காயம் அடைந்ததால் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.    

From around the web