நடிகை மீனா உருக்கம்!! எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்!!

 
மீனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மீனா. இவருடைய  கணவர் வித்யாசாகர் ஜூன் 27ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். கணவரது உயிரிழப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்து வந்தார். தற்போது நடிகை மீனா,  கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி இருக்கிறார்.

மீனா

நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில்  "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு பெறலாம்.  இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." என பதிவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web