நடிகை மீராமிதுன் தலைமறைவு?! வக்கீல் வாக்குமூலம்!!

 
மீராமிதுன்

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  இருவரையும் கைது செய்தனர்.  வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் நேரில்  ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

மீராமிதுன்

அதைத்தொடர்ந்து விசாரணை தொடங்க இருந்த நிலையில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு எதிராக முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இருப்பினும் மீரா மிதுன் தலைமறைவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (14ம் தேதி) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அரசு தரப்பு வக்கீல் எம்.சுதாகர் கூறும்போது, ‘‘நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயமாக இருக்கிறார். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவரது மொபைலும் தொடர்ந்து சுவிட்ச் சுப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனவும்  தெரிவித்தார்.மேலும் போலீசார் தொடர்ந்து மீரா மிதுனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கண்காணித்து வருகின்றனர்.  டிசம்பர் 7ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web