தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா! துபாயில் நடந்த திருமண புகைப்படங்கள்!

 
பூர்ணா

நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து, ஷேர் செய்து வருகின்றனர். திருமணம் நிச்சயமான நிலையில் ரகசிய திருமணம் நடைபெற்று விட்டது என்று எழுந்த பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில் நேற்று நடிகை பூர்ணாவுக்கும், தொழில் அதிபர் சானித் ஆசிப் அலிக்கும் துபாயில் திருமணம் நடந்து முடிந்தது.

பூர்ணா

நடிகை பூர்ணா ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரை பலர் ஆரம்பத்தில் சின்ன அசின் என்று அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து தலைவி, சசிகுமாரின் ‘கொடிவீரன்’, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், சவரக்கத்தி, விசித்திரன், அடங்கமறு உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பு திறனால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பூர்ணா

இந்நிலையில் துபாய் தொழில் அதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் பூர்ணாவுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தன.

பூர்ணா

இதைத்தொடர்ந்து அவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையாக நடிகை பூர்ணாவும், தொழில் அதிபர் சானித் ஆசிப் அலியும் துபாயில் நேற்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த புகைப்படங்களை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். நடிகை பூர்ணாவுக்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web