சாமி தரிசனம் செய்த காந்தாரா பட நாயகி… மங்களூரு கோவிலில் நடிகை சப்தமி கவுடா...

 
சப்தமி கவுடா

கேஜிஎப்' படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீதான பார்வை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது  'காந்தாரா' படம் அடுத்தடுத்து வரவேற்பையும் வெற்றியையும் கர்நாடகாவில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகின்றனது. காந்தாராவில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் காதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது.

சப்தமி கவுடா

இந்நிலையில்   சப்தமி கவுடாவின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.  நடிகை சப்தமி கவுடா   தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சப்தமி கவுடா

அப்போது அவர் கூறியதாவது, 'காந்தாரா' படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அந்த படத்தின் வெற்றி என்னை பெருமைப்படுத்தி உள்ளது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.   இனிமேல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். என்று அவர் கூறினார்.

 

 

From around the web