மின்சார பேட்டரியில் இயங்கக்கூடிய விமானம்!! ஆலிஸ் நிறுவனம் சாதனை!!

 
மின்சார விமானம்

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கம் வகையில் போக்குவரத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிர முயற்சியை எடுத்து வருகின்றனதற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏராளமானோர் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

அதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம், கார், பஸ் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் முழுமையாக  மின்சார பேட்டரியால் இயங்கக்கூடிய விமானத்தின் சோதனை ஒட்டத்தை ஆலிஸ் நிறுனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. முற்றிலுமாக மின்சார பேட்டரியால் இயங்கும் வகையிலான இந்த விமானம் 3,500 அடி உயரத்தில் சுமார் 8 நிமிடங்கள் வரை பறந்த பின் வெற்றிகரமாக தரையிறங்கியது.

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிக சவலான இன்றாக இருப்பினும் இந்த சோதனை ஓட்டம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

From around the web