6 மணி நேரம் விமானநிலையம் மூடல்!! பயணிகள் கடும் அவதி!!

 
மும்பை விமானநிலையம்

இந்தியாவில் வர்த்தக நகரங்களில் முதலிடத்தில் இருப்பது மும்பை மாநகரம் தான். இங்கிருந்து தான்  தலைநகர் டெல்லிக்கு அடுத்தபடியாக  அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  மும்பை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் வரை  2 ஓடுபாதைகளில் இயக்கப்படுகின்றன. மும்பை விமான நிலையம் தற்போது  அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மும்பை விமானநிலையம்

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணிநேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.

மும்பை விமானநிலையம்

 இதன் காரணமாக ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  விமான நிலைய ஓடுபாதைகளில் பருவமழைக்கு பிந்தைய தடுப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web