தமிழகம் முழுவதும் சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி!

 
கார் வாகனம் பறிமுதல் போலீசார் வெடிகுண்டு சோதனை

கோவையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவை கார் வெடிப்பு சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சாலைகளில் நீண்ட நேரம் கேட்பாரற்று கிடக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

கோவை கார் வெடி

சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பிற நகரங்களிலும் வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் இரவு முதல் இதுவரை 1,027 கார்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்கள் மட்டுமல்லாமல் ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

மர்ம கார் வெடிகுண்டு சோதனை
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து இதுவரை 56 உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத மீதி வாகனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web