இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு அழகா?! செம கடுப்பில் கேபிள் ஆபரேட்டர்கள்!

 
கேபிள்

எது செஞ்சாலும் ஒரு வரைமுறை வேணாமா? அதிமுக காலத்தில், அராஜகம் தலைவிரித்தாடுகிறது.. .என்று கூக்குரலிட்டு கதறியவர்கள், இப்போது ஆளுங்கட்சியாக ஆட்சியைப் பிடித்ததும், அதிமுகவை விட மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது தான் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்களின் குமுறல்களாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆக்டோபஸ் கரங்களால் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவது வழக்கமான ஒன்று என்ற பேச்சு பொது மக்களிடையேயும் பரவ துவங்கி விட்டது. இது காலம் காலமாகவே நடந்து வருவது தானே? நடிகர் அஜீத்தே கலைஞர் முன்னால் கண்ணை கசக்கிய கதையும் உண்டு  என்கிறார்கள் சீனியர் நிரூபர்கள்.

அதிர்ச்சி!! இன்று முதல் கேபிள் கட்டணமும் உயர்கிறது! எகிறும் மாதாந்திர பட்ஜெட்!!

இந்நிலையில் ஒரு கடிதம் கலங்கடித்து வருகிறது. அந்த கடிதம் இப்படி போகிறது.....
அன்பார்ந்த அரசு கேபிள் நிறுவன நோடல் அதிகாரி GM அவர்களே,.. கடந்த 27.10.2022 பகல் 12.00 மணியளவில் முடங்கிப் போன புதிய தலைமுறை மற்றும் பாலிமர் சேனல்கள் 5 நாட்கள் சென்ற பின்னரும் சீரடையவில்லை. இன்று துவங்கப்பட்ட மாதாந்திர சந்தா வசூலின் பொழுது வாடிக்கையாளர்கள்.....           
தம்பி....பாலிமர், புதிய தலைமுறை சேனலுக்கு என்னாச்சு... அது ரெண்டையும் சரி செஞ்சுட்டு பணம் வாங்கிட்டு போப்பா" என்று கூறுகிறார்கள்.
இதற்கு நோடல் அதிகாரியான நீங்கள் என்ன பதில் தரப்போகிறீர்கள் ?
வாடிக்கையாளருக்கு நாங்கள் என்ன பதில் கூற வேண்டும் ?
தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.!

என்னதான் பிரச்சனை உங்களுக்கு ?
1. சேனல் ஒளிபரப்பாகாது எனில் 15 நாள் முன்னறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும் !
2. தொழில்நுட்ப பிரச்சனை எனில் 24 மணி நேரத்தில் சரிபடுத்தப்பட்டிருக்க வேண்டும் !
3. உண்மை நிலையை செய்தி சுருள்( Scrolling) வடிவத்திலாவது ...100 ஆவது இன்போ சேனலில் வெளிபடுத்தியிருக்க வேண்டும்.
இப்படி எதையும் செய்திடாமல் இவ்வாறு மௌனமாக இருப்பது ஏனோ?

கேபிள் தொலைக்காட்சி
தலைவர், MD, GM போன்றவர்களின் பதவிக்கும், பொறுப்பிற்கும் ஏற்ற செயல்பாடல்ல இது. நீங்கள் 16000 ஆபரேட்டர்களுக்கு பதில் தருகிறீர்களோ இல்லையோ... நாங்கள் 21.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வீடு வீடாக சென்று மாத சந்தா வசூலிக்கும் எங்கள் பணியாளர்களுக்கு என்ன சொல்லி அனுப்புவது ?

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து துரித நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று நீள்கிறது அந்த கடிதம். ஊத வேண்டியதை ஊதி விட்டோம் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுத்தால் சரி தான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web