வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு.. யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?

 
சாக்சி மாலிக்

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சுமித் மல்லிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முக்கிய மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் மூன்று நாட்களாக மல்யுத்த வீரர்,  வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்  குறித்து பலரும் இணையத்தில் தேட தொடங்கினர். 

சாக்சி மாலிக்

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங். 66 வயதான இவர்  உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி-யாக இருக்கிறார்..  இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் மல்யுத்த வீரராக இருந்தவர். இந்திய மல்யுத்த சமமேளத்தின் தலைவராக இருந்து வருகிறார். WFI தலைவராகவும், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த-ஆசியாவின் துணைத் தலைவராகவும் சிங் இருந்து வருகிறார்.

ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தின் மூலம் அரசியலில் அறியப்பட்ட சிங், இன்றளவும் பாபர் மசூதி இடிப்பு வழக்குகளை எதிர்கொண்டுவருகிறார். மேலும் இவர் பல்ராம்பூர் மற்றும் கோண்டா தொகுதியில் 6 முறை எம்.பி.ஆக வென்றுள்ளார். ஒருமுறை சமாஜ்வாதி கட்சி சார்பிலும், 5 முறை பாஜக சார்பிலும் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

சாக்சி மாலிக்

அவ்வப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கிவரும் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு தற்போது மேலும் நெருக்கடி எழுந்துள்ளது. இவர் மீது பெண் வீரர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பாலியல் புகார் அதிகரித்துவரும் நிலையில் இந்திய மல்யுத்த தலைவர் பதவியில் இருந்து சிங்-ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

From around the web