அதிசயம் ஆனால் உண்மை!! 4 கால்களுடன் பிறந்த அபூர்வ குழந்தை!!

 
நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை

இயற்கையின் படைப்பில் சில உயிர்கள் அரியவகை அமைப்புகளுடன் பிறப்பது அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. மனித இனத்திலும் அப்படித்தான் சில குழந்தைகள் இயல்புக்கு மாறாக அதிசய உடல் அமைப்புகளுடன் பிறக்கின்றன. அப்படித்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு குழந்தை 4 நான்கு கால்களுடன் பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியை சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் 4 கால்களுடன் கூடிய குழந்தையை பெற்றார். பிரசவத்திற்குப் பிறகு, குவாலியரில் உள்ள ஜெயரோகா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளருடன் டாக்டர்கள் குழு குழந்தையை பரிசோதித்தது.   2.3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் தாகத் கூறுகையில், குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது. இதனை மருத்துவ அறிவியலில் இஸ்கியோபகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் போது, உடல் பாகங்கள் இரண்டு இடங்களில் வளரும்.
மாணவிக்கு பிறந்த குழந்தை

இந்த பெண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் கூடுதல் இரண்டு கால்களுடன் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளதாக தெரிவித்தார். தற்போது உடல் உறுப்புகளில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பிறகு, அவர் ஆரோக்கியமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால்கள் அகற்றப்படும். அவ்வாறு அகற்றினால் அந்த குழந்தை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று மருத்துவர் தாகத் கூறினார்.

 

From around the web