அசத்தல் சாதனை!! 16 பதக்கங்களை அள்ளி குவித்த இந்தியா!!

 
சாதனை

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 16 பதக்கங்களை வென்று இமாலய சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் மகளிர் அணி 2ம் இடத்தையும், ஆடவர் அணி 3ம் இடத்தையும் பெற்று நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் பல்கேரியாவில் தொடங்கி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய அணியைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டி தொடங்கிய நாள் முதல் வெற்றிகளை குவித்து வந்தனர். அதன்படி மகளிர் அணி 2ம் இடமும், ஆடவர் அணி 3ம் இடமும் பெற்று போட்டியை நிறைவு செய்துள்ளது.

ஜூனியர்

இந்நிலையில் 53 கிலோ எடை பிரிவில் மகளிர் அணியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஆன்டிம் தங்கப்பதக்கம் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதன் மூலம் ஜீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆன்டிம் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இதன்படி இந்தியா மகளிர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களும், ஆடவர் பிரீ ஸ்டைல் பிரிவில் 1 வெள்ளி, 6 வெண்கலமும், ஆடவர் கிரேக்க ரோமன் பிரிவில் 2 வெண்கலம் என 9 பதக்களையும் பெற்றனர். ஆக மொத்தம் இந்திய அணி 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச முன்னணி மல்யுத்த விளையாட்டில் சிறப்பாக செயல்படும் நாடுகளான அமெரிக்கா, ஈரான், அஜர்பைஜான், துருக்கி, உக்ரைன் மற்றும் ஜப்பான் உள்ளிட்டவற்றை எதிர்த்து இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.


கடந்த 2011ம் ஆண்டு நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெறும் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்றது. தற்போது நடப்பாண்டில் மொத்தம் 16 பதக்கங்களை குவித்து இமாலய சாதனையை படைத்துள்ளது. இதன்படி மல்யுத்த விளையாட்டு இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. விளையாட்டுத் துறையில் இந்தியா தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் அமைத்துள்ளது தெளிவாகிறது என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?