அசத்தல் சாதனை!! பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை குவித்த தாயும், மகளும் !!

 
மாசிலாமணி

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் வசித்து வருபவர் 40 வயதான மாசிலாமணி.இவருடைய கணவர் ரமேஷ் கூலித்தொழில் செய்து வருகிறார் . இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள். இதில் மாசிலாமணி அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து மகள்களை படிக்க வைத்து வந்தார்.  மாசிலாமணி உடல் பருமனாக இருப்பார். இந்நிலையில் பணிபுரியும் ஒரு   வீட்டு உரிமையாளரின் மகள் இவரை  ஜிம்மில் சேர்த்து விட்டார் . 

மாசிலாமணி
மாசிலாமணிக்கு ஜிம் பயிற்சியாளர் சிவக்குமார் பளுதூக்கும் பயிற்சி அளித்து வந்தார். மாசிலாமணியும் தன்னுடைய 17 வயது மகளான தாரணியுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆகஸ்ட்டில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பவர் லிஃப்டிங் சங்கத்தின் மாநில அளவிலான போட்டியில்  63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி மாசிலாமணி  தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  அவரது மகள் தாரணியும்  47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி அதே போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

மாசிலாமணி
இவர்கள் இருவருக்கும் ஜிம் பயிற்சியாளர் சிவக்குமார்  இலவசமாக பளுதூக்கும் பயிற்சிகளை  அளித்து வருகிறார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவும் இருவரும் தேர்வாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.வீட்டு வேலை செய்து வருவதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் தாயும் மகளும் சாதிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மாசிலாமணி வருமானத்திற்கு அரசாங்கம் ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும். அப்படி செய்தால் தன்னால் பளுதூக்கும் போட்டிகளில் இன்னும் அதிகமான வெற்றிகளை எட்ட முடியும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web