அமேசான் நிறுவனம் அதிரடி…. உலகம் முழுவதும் 10 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம்..

 
அமேசான் அமேசான்

ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அமேசான் நிறுவனம் அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி தனது ஊழியர்கள் 10,000 பேரை அமேசான் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.    சமூக வலைதளமான டுவிட்டரை  3½ லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார்.

அமேசான்

இதனை தொடர்ந்து முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதமாகும். இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது   ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும்.

அமேசான்

அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அமேசான் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது. சில்லறை விற்பனை, மனித வளம், குரல்வழி உதவி அலெக்சா ஆகிய பிரிவுகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.