அம்மாடியோவ்!! வசூல் சாதனை!! 100 நாட்களில் ரூ400கோடி!!

 
விக்ரம்

ஜூன் மாதம் 3ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய சாதனையை படைத்து வருகிறது. பல பிரமாண்ட படங்களை பின்னுக்கு தள்ளி இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம்
100 நாட்களை கடந்து ஓ.டி.டி.யில் வெளியான பின்னரும் ரூ.400 கோடி அளவுக்கு வசூல் சாதனை புரிந்துள்ளது. விக்ரம் திரைப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ்ஜின் எடிட்டிங், சதீஷ் குமாரின் ஆர்ட் ஒர்க், அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்சன் எல்லாம் காட்சிக்கு காட்சி மிரட்டுகின்றன. அதேபோல், அனிருத்தின் பின்னணி இசையும் பின்னி பெடலெடுத்துள்ளது.

விக்ரம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இளைய சமுதாயத்தினரின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.ரூ.400 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில் இன்னும் அதிகமான வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web