சோகம்!! கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பலி!! காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழப்பு!!

 
மீனா

சேலம்  மாவட்டம் மாசிநாய்க்கன்பட்டி இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத்.  இவரது மனைவி 27 வயது மீனா . இவர்களின் 11 மாத பெண் குழந்தை  சுபஸ்ரீ . இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மீனா நேற்று வீட்டின் அருகே உள்ள தரைமட்ட கிணறு பகுதியில் அமர்ந்து தனது குழந்தை சுபஸ்ரீக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார். அப்போது குழந்தை தவறி தரைமட்ட கிணற்றில் விழுந்துவிட்டது.

 மீனா

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா குழந்தையை காப்பாற்றுவதற்காக உடனடியாக கிணற்றில் குதித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கிணற்றுக்குள் குதித்து தாய், மகள் 2 பேரின் சடலங்களையும் மீட்டனர். 

 போலீஸ்


இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையும் அதனை காப்பாற்ற சென்ற தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web