ஆத்திரத்தில் மின் மோட்டாரை தூக்கி வீசிய மின்வாரிய ஊழியர்!!

 
மின் மோட்டார்


 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அதாவது தன்னுடைய வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என்று கூறினார். அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு குப்புராஜ் என்ற வணிக விற்பனையாளர் மட்டுமே இருந்துள்ளார். அவர் புகார் சொன்ன பெண்மணியிடம் தான் வந்து சரி செய்வதாகக் கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதனால் குப்புராஜ் ஆத்திரமடைந்து அங்கிருந்து மின்மீட்டரை எடுத்து அவர்கள் மீது வீசினார். இதனை கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ  வைரலானதைத் தொடர்ந்து பாலக்கோடு உதவி செற்பொறியாளர் வனிதா கூறும்போது, ‘‘மின்வாரியத்திற்கு புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி வீசிய மின்வாரி ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார். இதனால் பாலக்கோடு மின்வாரிய அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே வீட்டிலோ அல்லது ஒட்டுமொத்த தெருவிலோ மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால் அதனை சரி செய்ய மின்வாரிய அலுவலகத்திற்கு பொது மக்கள் தொலைபேசியில் புகார் செய்வதுண்டு. சிலர் நேரில் சென்று புகார் அளிப்பது உண்டு. அப்போது மின்வாரிய ஊழியர்களில் ஒரு சிலர் மட்டும் இதுபோன்று பொது மக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதை தவிர்க்க முடிவதில்லை என்பதை இது போன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web