மேலும் சரிந்த தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் கொண்டாட்டம்!!

 
gold actress

இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறினாலும், குறைந்தாலும் தங்கத்திற்கான மவுசு என்றுமே தான். பெண்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின்  மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக எப்போதுமே  தங்கம் தான் முதலிடத்தில்  இருந்து வருகிறது. நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் , முதலீட்டாளர்களின்  ஒரே சாய்சாக இருப்பதும் தங்கத்தின் மீதான முதலீடு தான். மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது.

gold jewel actress sneha

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தபோதிலும் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. ஒரு நாள் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் அடுத்தநாளே குறையத் தொடங்கியிருக்கிறது.

nayanthara gold jewels

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,880க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலை 20 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல்  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web