கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!! பரபரக்கும் தமிழகம்!!

 
தேர்தல்

தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களிலும் ஏற்பட்டுள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழஉறுப்பினர்கள் காலியிடங்களுக்கான தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பின்படி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி அச்சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் செப்.12-ம் தேதி நடைபெறும்.

கைத்தறி, தொழில்வணிகத்துறை, சமூக நலத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித்துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 38 கூட்டுறவு சங்கங்களில் 30 தலைவர் மற்றும் 9 துணைத்தலைவர் பதவி காலியிடங்களுக்கான தேர்தல் 12-ம் தேதியும், கைத்தறி, துணிநூல் துறை, மீன்வளத் துறை ஆகிய துறைகளின் கீழ் வரும் 4 சங்கங்களில் 3 தலைவர் மற்றும் 3 துணைத் தலைவர் காலி இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும்.

தேர்தல்

மேலும், கைத்தறித் துறை, தொழில் வணிகத் துறை, சமூக நலத்துறை, மீன்வளத் துறை, பட்டுவளர்ச்சித் துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 12 கூட்டுறவுச் சங்கங்களில் 17 நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் காலி இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் செப். 22-ம் தேதி தொடங்கும். பரிசீலனை செப். 23-ம் தேதியும், திரும்பப் பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் செப். 24-ம் தேதியும், போட்டியிருந்தால் செப். 29-ம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவித்தல் செப். 30-ம் தேதியும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web