வெட்டிங் போட்டோ ஷூட்டா எடுக்குறீங்க.? மட்டையால் அடித்து துரத்திய யானை!! வைரல் வீடியோ!!

 
வெட்டிங் போட்டோ ஷூட்

வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு இருந்த தம்பதியை பச்சை மட்டையால் அடித்து யானை விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   தற்போது திருமண விழாக்களில்   ப்ரீ மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் எடுப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.  

வெட்டிங் போட்டோ ஷூட்

மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக நிகழும் சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. அப்படி தான் கேரளாவில் ஒரு தம்பதியினருக்கு மறக்க முடியாத அனுபவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதுமண தம்பதிகள் யானை அருகே நின்று வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். இதில் கடுப்பாகிய யானை அந்த தம்பதியினரை   தென்னை மட்டையால் அடித்து விரட்டியுள்ளது.   இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது.

From around the web