இருமுடி கட்டி சபரிமலை போறீங்களா?! விரதமுறைகளை தெரிஞ்சிக்கோங்க!

 
சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி..!!

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. சாமியே சரணம் ஐயப்பா கோஷங்கள் அதிகாலையில் நம்மை துயில் எழுப்பி வருகின்றன. இந்த  மாதத்தில் ஐயப்பனுக்காக விரதம் தொடங்கி இருமுடி ஏந்தி சபரிமலை செல்ல தயாராகி வருகின்றனர் ஐயப்ப பக்தர்கள். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கடுமையாக விரதம் இருந்து மாலையிட்டு சபரிமலை செல்பவர் ஐயப்பனின் அவதாரமே என்கின்றனர் பக்தர்கள். 

ஐயப்பன் சபரிமலை இருமுடி
மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்: 


சபரிமலை செல்ல இருப்பவர்கள் கார்த்திகை  முதல் தேதியிலோ அல்லது 19ம் தேதிக்குள்ளாகவோ மாலை அணிந்து கொள்ளலாம்.  குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டியது அவசியம். துளசி மணி மாலை என்றால் 108ம் அல்லது ருத்திராட்ச மணி  54ம் வாங்கி ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் இணைத்து அணிய வேண்டும். பெரியவர்கள், தாய் , தந்தை ஆசியுடன் குருசாமி கையால் மாலை அணியலாம். இல்லையெனில் கோவிலில் அர்ச்சகர் கையால் அணிந்து கொள்ளலாம்.  மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதத்தை தவிர்ப்பது நல்லது. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வழிபட வேண்டும். கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியலாம். பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாலையை அணிந்தபிறகு  வீடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

 ஆனால் ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது. பெண்களின் சடங்கு,  குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது. மது, மாமிசம், புகைபிடித்தலை  முற்றிலும் விட்டுவிட வேண்டும். வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிலக்கு ஏற்படும் சமயங்களில் 5 நாட்கள் கழித்த பிறகே அவர்களின் சமையலை சாப்பிடலாம். காலில் செருப்பு ஏதும் அணியாமல் வெறும் காலில் நடப்பதே சிறந்தது. முதன் முறையாக  சபரிமலை செல்லும்  கன்னிச்சாமிகள் வீடுகளில் பூஜைகள்செய்து முடிந்த அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பேசும்போது  சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும்போது  சாமி சரணம் எனக் கூற வேண்டும். சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.  பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து  நீராட வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.  

சபரிமலை கோயில் வருமானம் 9 மடங்கு அதிகரிப்பு..!

மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் இவைகளை தவிர்க்க வேண்டும்.  தரையில் ஜமுக்காளம் மட்டும் விரித்து படுக்க வேண்டும். இனிய பேச்சுக்களை மட்டுமே பேச வேண்டும்.  பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. விரத நாட்களில் பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.  மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். வீண் மன சஞ்சலம் அடைய தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் இருந்து தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும்  அனுபவசாலிகளின் வாக்கு. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web