மாணவர்களே தயாரா?!! 6 முதல் 10 ம் வகுப்புக்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!!!

 
மாணவிகள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கம் முதலே நேரடி வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி பள்ளிகளில் வகுப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தேர்வுகள், கால அட்டவணை விடுமுறை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  மாணவர்களிடையே ஏற்பட்ட குறைபாடுகளை களைய பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் பல மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி


 

அதன் ஒரு பகுதியாக  தற்போது  6 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26ல் தொடங்கி 30ம் தேதி வரை நடைமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிவடைந்த உடன் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அக்டோபர் 6ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அட்டவணை

இந்த கால அட்டவணைப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலிக்க மாவட்ட, வட்டார  கல்வி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web