மாணவர்களே தயாரா?!! பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்!!

 
மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

தமிழகத்தில் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும், காலகட்டத்திற்கு ஏற்ப அவர்களின் சிந்தனைகளை தூண்டும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொறியியல் கல்லூரிகளில் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை  விரைவில் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை ஏற்கனவே  அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்துள்ளது

கல்லூரி மாணவிகள்
அந்த வகையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  முதலாமாண்டு மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் கட்டாய  பயிற்சி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி படித்த மாணவர்கள் மட்டும் தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதி கொள்ளலாம் மற்ற மாணவர்கள் தமிழில் தான் எழுத வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்
இந்த அறிவிப்பை அடுத்து  அண்ணா பல்கலைக்கழகம், அதன் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில்  மாணவர்கள் இந்தாண்டில் இருந்தே இந்த பாடங்களை பயில வேண்டும். அத்துடன் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டிற்குள் இந்த  பாடங்களை பாடத்திட்டத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்  என அறிவுறுத்தியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில புலமையை வளர்க்க பயிற்சியும், நன்றாக ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பானியம் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கவும்  புதுவகை பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web