மாணவர்களே தயாரா?! 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!!

 
மாணவர்கள்

8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதிவாக்கில் 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 8ம் வகுப்பு பொதுதேர்வை எழுதி தகுதியானவர்கள். எனவே வருகிற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான 5 நாட்களில் இணையதளம் மூலம் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள்

அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in  ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். இந்த 5 நாட்களில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்களுக்கு மேலும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத தகுதியான தனித்தேர்வர்கள் தங்கள் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அதன் மதிப்பெண் சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மாணவர்கள்

மேலும் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் தேதி தமிழ், 11ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கணிதம், 13ம் தேதி அறிவியல் மற்றும் 14ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12 மணிவரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுத தேர்வர்கள் தயாராகும்படி தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web