மாணவர்களே தயாரா?! இன்று க்யூட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
CUTE

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான கியூட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி வரை நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து தேர்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 500 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 2 நகரங்களிலும் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது.

cute

தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணிணி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவீத மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET)-UGக்கான முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

CUTE

முன்னதாக கடந்த 8ம் தேதி கியூட் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அத்துடன் தேர்வரின் OMR விடைத்தாளையும், இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகளையும் வெளியிட்டது. இந்த உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேர்வர்கள் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web