ஜாலி!! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பரிசுகள் !! தமிழக அரசு அதிரடி!!

 
பள்ளி, கல்லூரி மாணவிகள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அண்ணா பிறந்த நாளில் தமிழகத்தில் காலை  உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நாளில் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு

அதன்படி செப்டம்பர் 15ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்களுக்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உயரும்!, 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்புகளில்  பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு

அதனை தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி அனுசரிக்க பட உள்ள பெரியார் பிறந்தநாளில் 1. பெண்ணடிமை தீருமட்டும், 2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5000,  2ம் பரிசாக  ரூ.3000, 3ம் பரிசாக  ரூ.2000 வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2000  வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web